search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாப்ட்வேர் என்ஜினீயர்"

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவில் 800 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இந்திய தம்பதியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #IndiancouplediesinUS
    நியூயார்க்:

    கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கன்னூர் பொறியியல் கல்லூரியில் பி.டெக். பயின்று கடந்த 2010-ம் ஆண்டில் பட்டம் பெற்ற விஷ்ணு விஸ்வநாத், தன்னுடன் அதே கல்லூரியில் பயின்ற மீனாட்சி மூர்த்தி என்னும் இளம்பெண்ணை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

    இருவருமே சாப்ட்வேர் என்ஜினீயர்கள் என்பதால் அமெரிக்காவில் சுலபமாக வேலைகிடைத்தது.

    நியூயார்க் மாநிலத்துக்கு உட்பட்ட சான் ஜோஸ் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் சிஸ்டம் என்ஜினீயராக பணியாற்றிய விஷ்ணு விஸ்வநாதனும் அவரது மனைவியும் பிரபல சுற்றுலாத்தலங்களை கண்டு களிப்பதில் ஆர்வம் நிறைந்தவர்களாக இருந்தனர்.



    இதுபோன்ற ஆர்வம் கொண்ட மேலும் பலருக்கு அழகிய சுற்றுலாத்தலங்களை அறிமுகம் செய்துவைக்கும் நோக்கத்தில் (Holidays and Happily Ever  Afters) என்னும் வலைப்பூ தளம் (பிளாக்) ஒன்றை இணையதளத்தில் நடத்தி வந்துள்ளனர்.

    தாங்கள் ஜோடிப்பறவைகளாக சுற்றித்திரிந்த இடங்களில் எடுத்த புகைப்படங்களையும் அந்த இடங்களைப் பற்றிய அரிய தகவல்களையும் அந்த வலைப்பூ தளத்தில் பதிவிட்டிருந்தனர்.



    கலிபோர்னியா மாநிலத்தில் யோசேமைட் தேசிய பூங்காவை சுற்றிப்பார்க்க சமீபத்தில் சென்ற இந்த தம்பதியரின் பிரேதங்கள் அங்குள்ள சுமார் 800 அடி பள்ளத்தாக்கில் நேற்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த அசம்பாவிதம் எப்படி நேர்ந்தது? என்று விசாரித்து வருவதாக அந்த பூங்காவின் செய்தி தொடர்பாளர் ஜேனி ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். வழிக்கலான மலைப்பகுதியில் அமைந்துள்ள இதே பூங்காவை சுற்றிப் பார்க்க வந்த பத்துபேர் இந்த ஆண்டில் தவறி விழுந்து இறந்ததாக தெரிகிறது. அவர்களில் ஒருவர் கடந்த மே மாதம் இங்கு இந்தியாவை சேர்ந்த ஆஷிஷ் பெனுகோன்டா(29) என்பது நினைவிருக்கலாம்.

    இந்நிலையில், விஷ்ணு விஸ்வநாத்(29) மற்றும் மீனாட்சி மூர்த்தி(30) தம்பதியர் தற்போது 800 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #IndiancouplediesinUS #YosemiteNationalPark
    விசாரணை என்ற பெயரில் சாப்ட்வேர் என்ஜினீயரை அவதூறாக பேசிய பெண் இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாபு என்ற சேஷாத்திரி. சாப்ட்வேர் என்ஜினீயர். இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு எனது மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதன்பின்பு, என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் எனது மனைவி அம்பத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி விசாரணைக்காக என்னையும், என் குடும்பத்தினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்தார். நாங்களும் விசாரணைக்கு சென்றோம். அப்போது இன்ஸ்பெக்டர், எனது மனைவியை நாற்காலியில் அமர வைத்து பேசினார். என்னையும், எனது குடும்பத்தினரையும் நீண்ட நேரமாக நிற்க வைத்து எனது மனைவி முன்னிலையில் என்னை அவதூறாக பேசினார். எனது காலில் காயம் ஏற்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருவது குறித்து இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்தபோதும் அவர் என்னை நாற்காலியில் அமர வைக்காமல் வேண்டுமென்றே அவமானப்படுத்தினார். எனவே, இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் சான்று ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு வழங்கி விட்டு இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
    ×